
கோலாலம்பூர், பிப்ரவரி-25 – 300,000 ரிங்கிட் நட்டத்தை ஏற்படுத்திய திருட்டுச் சம்பவம் தொடர்பில், இன்ஸ்பெக்டர் மற்றும் கார்ப்பரல் நிலையிலான 2 போலீஸ்காரர்கள் கைதாகியுள்ளனர்.
44 மற்றும் 34 வயதுடைய அவ்விருவரையும் ஒரு நாள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டிருப்பதாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி மொஹமட் இசா கூறினார்.
இவ்விவகாரத்தைப் போலீஸ் கடுமையாகக் கருதுகிறது;
எனவே தவறிழைத்தவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட ஏதுவாக விரிவான விசாரணை நடத்தப்படுமென அவர் சொன்னார்.
விசாரணைக்கு இடையூறாக அமையுமென்பதால், யூகங்களை எழுப்ப வேண்டாமென்றும் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.