
சூரத், ஜனவரி-24-இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தொழிற்பேட்டை நகரான சூரத்தில், 21 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய குடிநீர் தொட்டி, திறந்த முதல் நாளிலேயே இடிந்து விழுந்தது.
15 மீட்டர் உயரத்திலான இந்த தொட்டி, 33 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டது.
ஆனால், தொடங்கிய நாளிலேயே இடிந்து விழுந்ததால், மக்கள் பெரும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், பல ஆண்டுகளாகக் காத்திருந்த குடிநீர் திட்டம் உடனடியாக தோல்வியடைந்ததால், கிராம மக்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
அதிகாரிகள், கட்டுமானத் தரம் மற்றும் குத்தகை நிறுவனத்தின் அலட்சியம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கட்டுமானத்துடன் தொடர்புடைய 7 முக்கிய அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டு கைதாகியுள்ளனர்.
இச்சம்பவம், அரசாங்கத்தின் அடிப்படை வசதி கட்டமைப்புத் திட்டங்களில் தரக் கண்காணிப்பு, ஊழல், மற்றும் பொது மக்களின் நம்பிக்கை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.



