Latestமலேசியா

35 ஆண்டுகளாக காத்திருந்த பாண்டிமுனி வேட்டைக்காரன் காளியம்மன் ஆலயத்தின் வரலாற்று சாதனை

போர்ட் கிள்ளான், அக்டோபர்-24,

சுமார் 35 ஆண்டுகள் நீண்ட பயணத்திற்குப் பிறகு, ஓம் ஸ்ரீ பாண்டிமுனி வேட்டைக்காரன் காளியம்மன் ஆலயம், போர்ட் கிள்ளான், பண்டமாரானில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் கண்டுள்ளது.

அக்டோபர் 24, வெள்ளிக்கிழமையன்று கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் சுற்று வட்டார பக்தர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த ஆலயம் மறைந்த பூசாரி வி. மாயாண்டி அவர்களால் 1990-ஆம் ஆண்டு கிம் சுவான் (Kim Chuan) பகுதியில் நிறுவப்பட்டது.

பின்னர் பல இடமாற்றங்கள் சந்தித்த ஆலயம், 2000-ஆம் ஆண்டு, பக்தர் ராஜன் கேசவன் வழங்கிய லோராங் கோப்பி 4 பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டது.

அந்த இடத்தில் ஆலய நிர்வாகம் மாயாணி பூசாரியின் மகன் ஜோயதி குமார் தலைமையில் முழுமையாக நடத்தப்பட்டது.

இந்நிலையில், மடானி அரசாங்கத்தின் RIBI எனும் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்படும் மானிய உதவியுடன், கடந்தாண்டு அக்டோபரில் திருப்பணி தொடங்கியது.

தனியார் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் கூட்டு முயற்சியில் கடந்த செப்டம்பரில் ஆலயத்தின் புதிய நிரந்தர கட்டடம் நிறைவுப் பெற்றது.

திருப்பணி முடிந்து மகா கும்பாபிஷேகம் கண்டிருப்பதால், ஆலய நிர்வாகம், அனைத்து நன்கொடையாளர்களுக்கும் ஆதரவளித்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துகொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!