
கோலாலம்பூர், டிசம்பர் 27-2021-ஆம் ஆண்டு முதலான ஒப்பந்த மருந்தாளர்களின் வேலை நிலை குறித்து நடவடிக்கை எடுத்ததற்காக, மடானி அரசுக்கு மலேசிய மருந்தாளர்கள் சங்கமான MPS நன்றி தெரிவித்துள்ளது.
379 மருந்தாளர்கள் நிரந்தர நியமனக் கடிதம் பெற்றுள்ளனர்; மற்றவர்கள் ஒரு வருட ரிசர்வ் பட்டியல் நீட்டிப்பு பெற்றுள்ளனர்.
இந்த விவகாரத்தை மேலவையில் எழுப்பிய செனட்டர் Dr லிங்கேஷ்வரனுக்கும் சங்கம் நன்றியை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், சபா, சரவாக், லாபுவான் பகுதிகளில் பணியாற்றும் மருந்தாளர்களுக்கு வழங்கப்படும் BIW வட்டார ஊக்கத்தொகை தொடர்பான பிரச்னையை அரசாங்கம் விரைவில் தீர்க்க வேண்டும் எனவும் MPS வலியுறுத்தியது.
நீண்ட கால நிலைத்தன்மை மற்றும் பராமரிப்பின் தொடர்ச்சியை உறுதிச் செய்வதற்காக, ஒருங்கிணைந்த, தரவு சார்ந்த பணியாளர் வியூகமும் அவசியம் என MPS கூறியது.



