காஜாங், அக்டோபர்-7 – நாடு முழுவதும் இவ்வாண்டு முதலாமாண்டில் நுழைந்த மாணவர்களில் 122,000 பேருக்கு, இன்னமும் வாசிக்க, எழுத மற்றும் எண்ணத் தெரியவில்லை.
கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் (Fadhlina Sidek) அந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்றின் போது கல்வியிலிருந்து விடுபட்டது, ஏழ்மை மற்றும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் ஆகிய அம்சங்கள் அந்நிலைக்கு வித்திட்டுள்ளன.
எனினும், ‘நமது குழந்தைகள்’ போன்ற திட்டங்கள் வாயிலாக கல்வி அமைச்சு தலையிட்டு நடவடிக்கை எடுப்பதால், அவ்வெண்ணிக்கையில் நல்ல மேம்பாடு காணப்படுமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மாணவர்கள் மத்தியில் 3M எனப்படும் வாசித்தல், எழுதுதல், எண்ணுதல் ஆகிய மூன்று திறன்களை மேம்படுத்தும் நோக்கில், ஆகஸ்ட் மாதம் தொடங்கி கல்வித் திட்டத்திற்கான தலையீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.