
கோலாலம்பூர், ஜூலை 22 – இன்று காலை மணி 10 வரை நான்கு இடங்களில் காற்றின் தூய்மைக்கேடு குறியீடு ஆரோக்கியமாக இல்லை. நெகிரி செம்பிலான் சிரம்பானில் காற்றின் தூய்மைக்கேடு குறியீடு 155 ஆகவும், நீலாயில் 154 ஆகவும், சிலாங்கூர் ஜோஹான் செய்தியாவில் 151 ஆகவும் மற்றும் பஹாங் , குவாந்தான Balok Baru வில் 140 ஆகவும் காற்றின் தூய்மைக்கேடு குறியீடு இருப்பதாக மலேசிய சுற்றுப்புற துறையின் காற்று தூய்மைக்கேடு குறியீடு நிர்வாக முறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
காற்றின் தூய்மைக்கேடு குறியீட்டின் அளவு 101 முதல் 120 வரை இருந்தால் மூத்த குடிமக்கள், சிறார்கள் போன்றவர்கள் மற்றும் சுவாசிக்கும் பிரச்சனை உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் காற்றின் தரத்தை கண்காணிக்கும் 68 நிலையங்கள் காற்றின் தூய்மைக்கேட்டின் குறியீடு தரவுகளை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியிட்டு வருகின்றன.