Latestமலேசியா

4 கார்களை மோதிய பின் தப்பியோடிய AudiTT ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் பாரு, பிப் 26 – ஜோகூர் பாரு, தாமான் அபாட், ஜாலான் Serigalaவில் ஞாயிற்றுக்கிழமை இதர நான்கு வாகனங்களை மோதியபின தப்பியோடிய Audi TT ஒட்டுனரை போலீசார் தேடிவருகின்றனர்.

மாலை மணி 7.15அளவில் நடைபெற்ற அந்த விபத்தில் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்டதாக தென் ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ரவுப் செலமாட் ( Raub Selamat ) தெரிவித்தார்.

ஜாலான் டத்தோ சுலைமானிலிருந்து வந்த Audi TT , Jalan Harimau விலிருந்து வந்த Proton Pesona காரை மோதியதைத் தொடர்ந்து Audi TT
கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இதர மூன்று கார்களை மோதியது.

இந்த சம்பவத்தில் அந்த வாகன ஓட்டுனர்கள் காயம் அடையவில்லை.

இந்த விபத்து குறித்து Audi TT ஓட்டுனர் இன்னும் போலீசில் புகார் செய்யவில்லை. சம்பந்தப்பட்ட அந்த ஓட்டுநர் மேல் விசாரணைக்காக தென் ஜோகூர்ப பாரு போக்குவரத்து அமல் மற்றும் விசாரணைத் துறையிடம் புகார் அளிப்பதற்கு முன் வரும்படி ரவுப் செலமாட் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!