
ஷா ஆலாம், ஜூலை-6,
4 மனைவியருடன் உடலுறவுக் கொண்டதை வீடியோவாக எடுத்து பரப்பிய, சுயேட்சை சமய சொற்பொழிவாளர் ஒருவர் ஷா ஆலாமில் கைதாகியுள்ளார்.
ஜூன் 16-ஆம் தேதி இரண்டாவது மனைவி போலீஸில் புகாரளித்ததை அடுத்து, அவ்வாடவர் சிக்கியதாக, ஷா ஆலாம் போலீஸ் தலைவர் மொஹமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்நபரின் 2 கைப்பேசிகளும் ஒரு மடிக்கணினியும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பேசியை பரிசோதித்ததில், அவரையும் அவரின் மனைவியரையும் உட்படுத்திய பாலியல் உறவு வீடியோக்களும், மேலும் சில பெண்களின் அந்தரங்கப் புகைப்படங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து விசாரணைகளுக்காக புதன்கிழமை தொடங்கி 4 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்ட அந்நபர், நேற்று போலீஸ் உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டார்.
என்றாலும் விசாரணையை தாங்கள் முழுமைச் செய்து வருவதாக இக்பால் கூறினார்.
குற்றவியல் சட்டம், தொடர்பு – பல்லூக சட்டம், சிறுசிறு குற்றங்களுக்கான சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.