
டேசா பெட்டாலிங், ஏப் 25 – நாட்டின் பிரபல பாடகரும், நடிகருமான சிவக்குமார் ஜெயபாலன் இன்று காலமானார். அவருடைய திடிர் மரணம் மலேசிய கலை உலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
1977ஆம் ஆண்டு பிறந்த சிவக்குமாருக்கு 48 வயதாகிறது. குறுகிய காலக்கட்டத்திலேயே தனது பாடல் திறனால் மக்கள் மனதை வென்றவர் அவர். எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கக்கூடியவர் அவர்.
சிலாங்கூர், டேசா பெட்டாலிங்கில் உள்ள தனது அடுக்குமாடி வீட்டின் 11வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது நெருங்கிய உறவினர் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆஸ்ட்ரோவின் பாடல் திறன் போட்டி மூலம் மலேசிய கலைத்துறைக்கு அறிமுகமானவர் சிவக்குமார். 2006ஆம் ஆண்டு நடைப்பெற்ற போட்டியின் போது, மக்கள் தேர்வு பாடகர் எனும் அங்கீகாரத்தை பெற்று கார் ஒன்றையும் அவர் பரிசாக வென்றார்.
இதனிடையே, பினாங்கை பூர்வீகமாகக் கொண்ட சிவக்குமாரின் இறுதிச் சடங்கு, எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணிக்கு கிள்ளானில் உள்ள தாமான் ஶ்ரீ செந்தோசா ஜெயாவில் உள்ள அவரது உறவினர் வீட்டில்
நடைப்பெறவிருக்கிறது. அதன் பின்னர் மதியம் 2 மணிக்கு கிள்ளான் சிம்பாங் லீமா இடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படும்