
கூச்சிங், ஆகஸ்ட்-24 – மலேசியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள திறமையான நிபுணர்கள் விரைவில் சரவாக்கில் ஐந்து ஆண்டு வேலை விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இப்புதிய விசாவை சரவாக் பிரிமியர் Tan Sri Abang Johari Openg அறிமுகப்படுத்தியதாக மாநில அரசின் துணைச் செயலாளர் Abdullah Zaidel தெரிவித்தார்.
இந்த முயற்சியானது உடனடி மனிதவளத் தேவைகளைப் பூர்த்திச் செய்யவும், திறன் பற்றாக்குறைகளை நிரப்பவும், உள்ளூர் நிபுணத்துவத்தை வளர்க்கவும் உதவும் என்றார் அவர்.
நடப்பில் ஓராண்டு அல்லது ஈராண்டுகளுக்குப் புதுப்பிக்கக்கூடிய விசாக்களைப் போல் அல்லாமல், இந்த ஐந்து ஆண்டு விசா வருடாந்திர புதுப்பிப்பைக் கொண்டுள்ளது.
தவிர, பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்களுக்கு கூடுதல் வசதியை வழங்குகிறது.
மேலும், பொறியியல், புத்தாக்கம், அறிவியல் ஆராய்ச்சி போன்ற முக்கிய துறைகளில் மேற்கு மலேசியாவிலிருந்து திறமைகளை வரவேற்க சரவாக் தயாராக இருப்பதாக Abdullah கூறினார்.
மாநிலத்தின் முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றமாக இருக்கும் என்றார் அவர்.
இந்த முயற்சி hydrogen, எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த துறைகள் மற்றும் methanol உற்பத்தி போன்ற பெரிய திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் எனவும், நிபுணர் விண்ணப்பங்களை கையாள்வதில் குடிநுழைவுத் துறை திறம்பட செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.