
கோலாலம்பூர், அக் 30 –
அக்டோபர் 21 ஆம் தேதி 5.76 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளையிட்டது மற்றும் அந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக பாசீர் மாஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை ஒரு காதல் ஜோடி மறுத்தது.
மாஜிஸ்திரேட் சைட் பாரிட் சைட் அலி முன்னிலையில் தனித்தனியாக குற்றச்சாட்டு படிக்கப்பட்டபோது 59 வயதுடைய வீ சின் ஊய் ( Wee Chin Ooi ) மற்றும் அவரது காதலியான 57 வயது வீ பெய் பாங் ( Wee Fei Fang ) ஆகியோர் மறுத்தனர்.
பாசீர் மாஸிற்கு அருகே ஜாலான் பசாரிலுள்ள Aik Lee Jaya Sdn Bhd
அடகுக் கடையிலுள்ள ஒரு பெண்ணை அக்டோபர் 21 ஆம் தேதி நண்பகல் 1.30 மணியளவில் கத்தி முனையில் மிரட்டி 5.76 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகளை கொள்ளையிட்டதாக Chin Ooi மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 14 ஆண்டு சிறை மற்றும் அவசியமானல் பிரம்படி விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 392 ஆவது மற்றும் 397 ஆவது பிரிவின் கீழ் அந்த ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதே வேளையில் அதே நாள் மற்றும் அதே நேரத்தில் இந்த கொள்ளையில் Chin Ooi க்கு உடந்தையாக இருந்தாக
Fei Feng மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அவ்விருவருக்கும் ஜாமின் அனுமதிக்கப்படவில்லை. அவ்விருவர் மீதான குற்றச்சாட்டு மீண்டும் மறு வாசிப்புக்காக நவம்பர் 6ஆம்தேதி செவிமடுக்கப்படும்.



