
கோலாலம்பூர், ஜனவரி-27 – சீனப் புத்தாண்டுக்கான 50 விழுக்காடு டோல் கட்டணக் கழிவுச் சலுகையானது, முதல் வகுப்பு அல்லது தனியார் வாகனமோட்டிகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகும்.
PLUS Malaysia நிறுவனம் தனது சமூக ஊடகங்கள் வாயிலாக அதனை நினைவுப்படுத்தியுள்ளது.
அக்கட்டணச் சலுகை இன்று நள்ளிரவு 12.01 தொடங்கி செவ்வாய் இரவு 11.59 மணி வரை வழங்கப்படும்.
MyPLUS -TTA எனப்படும் PLUS-சின் பயண நேர ஆலோசனை அட்டவணையைப் பின்பற்றி சொந்த ஊர்களுக்குத் திரும்புமாறும் அது கேட்டுக் கொண்டது.
விழாக்கால இலவச டோல் கட்டணச் சலுகை இவ்வாண்டு முதல் நிறுத்தப்பட்டிருப்பதால், இந்த 50 விழுக்காடு டோல் கட்டணக் கழிவு வழங்கப்படுகிறது.