Latestமலேசியா

500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்கேற்புடன் மலேசியாவில் முதன் முறையாக நடந்தேறிய World Summit 2025 STEM போட்டி

கோலாலாம்பூர், ஜூலை-28- The World Summit 2025 எனும் அனைத்துலக நிகழ்வை முதன் முறையாக மலேசியா ஏற்று நடத்தியுள்ளது.

சிலாங்கூர், சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கிய இந்த 2-நாள் மாநாடு, STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியத் துறை சார் திறமையாளர்களின் உலக சங்கமமாகும்.

TMP Little Scientist Research Academy ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, STEM கல்வித் துறையில் ஒரு பெரிய முயற்சியான இது, அனைத்துலக அரங்கில் இளயோரின் திறமைகளையும் திறன்களையும் வெளிப்படுத்தும் களமாகவும் அமைந்தது.

செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன், Geomatika Edugroup-ப்பின் துணைத் தலைவர் டத்தோ மாஸ்ரின் ரொஹிசா (Datuk Mazrin Rohizaq) ஆகியோர் நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகைப் புரிந்தனர்.

இதில் International Science Olympiad, International Abacus Olympiad என 2 பிரிவுகளில் போட்டியும் நடத்தப்பட்டதில் 500 மாணவர்கள் பங்கேற்றனர்;

15 நாடுகளிலிருந்து நேரில் வந்தும், 2 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இயங்கலை வாயிலாகவும் போட்டியில் பங்கெடுத்தனர்.

முதல் நாள் கலாச்சார பகிர்வும், இரண்டாவது நாளில் தேர்வும், தேசிய அளவிலான பரிசளிப்பும் நடைபெற்றது.

அடுத்த நாள் முழுக்க மாணவர்கள் தேர்வுகளில் கலந்துகொண்டனர்; மதிப்பீடு மற்றும் பரிசோதனை என 2 பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது.

அறிவியல் கருத்தியலை எந்தளவுக்கு புரிந்துகொண்டு, அதனை செய்முறையில் மாணவர்கள் காட்டுகின்றனர் என்ற அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன.

மாணவர்களின் பங்கேற்பு ஊக்கமளிக்கும் வகையில் இருந்ததாக, ஏற்பாட்டுக் குழுத் தலைவர் Dr மாலினி ஏகநாதன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகளோடு, அனைத்துலக ஜூரி விருதுகள், Diamond, Platinum விருதுகள், தங்கம்-வெள்ளி-வெண்கலப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!