
கோலாலம்பூர், பிப் 4 -சபா-கலிமந்தான் , நுனுகானில் ( Nunukan ) உள்ள மூன்று கிராமங்களுக்கு இழப்பீடாக 5,207 ஹெக்டர் நிலத்தை இந்தோனேசியாவிற்கு மலேசியா ஒப்படைத்தது என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது மற்றும் பொய் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார் .
மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளும் 1915 ஆம் ஆண்டு முதல் கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டினால் கட்டுப்பட்டுள்ளன என்று அவர் வலியுறுத்தினார்.
நாம் உடன்பாட்டிற்குக் கட்டுப்பட வேண்டும், மேலும் சர்ச்சைக்குரிய அந்த பகுதி 1915ஆம் ஆண்டின் உடன்பாடு முதல் தொடக்கத்திலிருந்தே நமது அனைத்து பதிவுகளிலும் வலியுறுத்தப்படுவதை தாம் காண்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.
நாங்கள் அதை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் அது மலேசியாவிற்கு சொந்தமானது என்று நாங்கள் ஒருபோதும் உரிமை கோரவில்லை என்று அவர் கூறினார்.
இன்று மக்களவையில் நடைபெற்ற மலேசிய-இந்தோனேசிய எல்லைப் பிரச்னை குறித்த சிறப்பு நாடாளுமன்ற தகவல் அமர்வில் பிரதமர் இத்தகவலை வெளியிட்டார்.



