கோலாலம்பூர், நவம்பர்-29, நாட்டில் வெள்ள நிலவரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் மையத்தின் இன்று காலை வரைக்குமான தகவலின் படி, 7 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,000 பேரைத் தாண்டியுள்ளது.
மொத்தமாக 22,911 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கிளந்தானில் மட்டுமே கிட்டத்தட்ட 60,000 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
அங்கு 10 மாவட்டங்களில் 221 வெள்ளத் துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் மோசமடைவதால் பாதுகாப்புக் கருதி கிளந்தானில் 102 இடங்களுக்கான மின்சார விநியோகத்தை TNB துண்டித்துள்ளது.
இவ்வேளையில் திரங்கானுவில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அனைத்து 8 மாவட்டங்களிலும் வெள்ளமேற்பட்டுள்ளது.
கெடாவில் 2,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெகிரி செம்பிலானில் 392 பேர், சிலாங்கூர் 161 பேர் , பெர்லிஸ் மாநிலத்தில் 385 பேர், பேராக்கில் 61 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.