
குவந்தான், ஜன 21 – ஜாலான் குவாந்தான் -கெமாமன் சாலையில் ஏழு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் வாகனத்தில் சிக்கி காயமடைந்தார். இன்று காலை 10 மணியளவில் நடந்த இவ்விபத்தில் டிரெய்லர், லாரி, நான்கு சக்கர வாகனம் மற்றும் நான்கு கார்கள் என ஏழு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதிக்கொண்டதாக பஹாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தொடர்பு அதிகாரி சுல்ஃபாட்லி ஸக்கரியா ( Zulfadli Zakaria ) தெரிவித்தார். கெபெங் ( Gebeng ) தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 10 தீயணைப்பு வீரர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர் .
இந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் பெரோடுவா மைவி காரில் சிக்கிக் கொண்ட வேளையில் மற்ற வாகனங்களில் இருந்த 13 பேர் காயம் அடையவில்லை. தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி வாகனங்களில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டனர்.