கனடா, செப்டம்பர் -29 – 72 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்த டைனோசரின் இராட்சத மண்டை ஓடு, கனடாவின் ஆல்பர்ட்டாவில் (Alberta) நிலத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள தரிசு நிலங்களில் சுற்றித் திரிந்த, தாவரங்களை உண்ணும் Pachyrhinosaurus வகையைச் சேர்ந்த டைனோசரின் 272 கிலோ கிராம் மண்டை ஓடே அதுவாகும்.
தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர்களால் Big Sam என்றும் அழைக்கப்படும் இந்த டைனோசர், குழாய்க்கல் சிற்றோடையில் (pipestone creek) கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய டைனசோர் மற்றும் மிகப்பெரிய மண்டை ஓடு ஆகும்.
வட அமெரிக்காவில் மிகவும் அடர்த்தியான எலும்பு படுக்கைகளில் ஒன்றாக கருதப்படும் அப்பகுதியில், வயது வந்த டைனோசர் எலும்புகளுடன், நூற்றுக்கணக்கான குட்டி டைனசோர்களின் தோல் படிமங்களும் எலும்புகளும் இருப்பதாக, டைனோசர் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ஒரு பழங்காலவியல் நிபுணர் கூறினார்.