பாலேக் பூலாவ், செப்டம்பர் -3, பினாங்கு பாலேக் பூலாவில் ‘IPD Barat Daya’ என்ற எழுத்தும், அரச மலேசியப் போலீஸ் படையின் சின்னமும் பொறிக்கப்பட்ட T சட்டையை அணிந்திருந்த வங்காளதேச ஆடவர் டிக் டோக்கில் வைரலாகியுள்ளார்.
இந்நிலையில் அச்சம்பவம் தங்களின் கவனத்துக்கும் வந்திருப்பதை உறுதிச் செய்த Barat Daya போலீஸ் தலைவர், Superintendan Kamarul Rizal Jenal அச்சட்டைக்கும் அதிகாரப்பூர்வ போலீஸ் பணிக்கும் சம்பந்தமில்லை என்றார்.
அந்த T சட்டை கோத்தோங் ரோயோங், உடற்பயிற்சி உள்ளிட்ட சமூக நடவடிக்கைகளின் பயன்பாட்டுக்காக 2016-ல் செய்யப்பட்டதாகும்.
எனவே அதன் பயன்பாட்டுக்கும், போலீசாரின் அதிகாரப்பூர்வ கடமைகளுக்கும் தொடர்பில்லை.
ஆக, வைரலான வீடியோ குறித்து யூகங்களை எழுப்ப வேண்டாமென பொது மக்களை Kamarul Rizal
கேட்டுக் கொண்டார்.