கோலாலம்பூர், செப்டம்பர் -10 – சுகாதார அமைச்சின் அங்கீகாரம் பெறாத பொருட்களை விற்றதற்காக, பிரபல மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனமான மைடின் எனப்படும் Mydin Mohamed Holdings Bhd-டுக்கு 20,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2 குற்றச்சாட்டுகளையும் மைடின் ஒப்புக் கொண்டதை அடுத்து கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.
மைடின் சார்பில் ஆஜரான இருவரும் தலா 10,000 ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும்; இல்லையேல் ஓராண்டு சிறை செல்ல வேண்டுமென நீதிபதி அறிவித்தார்.
எனினும் இருவரும் அபராதத்தைச் செலுத்தினர்.
கடந்தாண்டு ஜூலை 18-ஆம் தேதி Kompleks Sinar Kota மற்றும் Taman Danau Kota-வில் உள்ள மைடின் பேரங்காடிகளில் அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
KKM அனுமதிப் பெறாத பல்வேறு சுவையிலான பற்பசைகளை 209 பெட்டிகளிலும் 23 செட்டுகளிலும் வைத்து விற்றதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.