புது டெல்லி, செப்டம்பர் -15 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு ஈன்றுள்ள கன்றுக்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
தனது Log Kalyan Marg வீட்டின் புதிய உறுப்பினர் என்ற caption-னோடு மோடி கன்றுக் குட்டியுடன் இருக்கும் வீடியோவையும் புகைப்படங்களையும் X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
கன்றுக் குட்டியின் நெற்றிப்பொட்டில் ஒளி போன்ற அடையாளமிருப்பதால், அதற்கு ‘தீப்ஜோதி’ என தாம் பெயர் சூட்டியுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.
கன்றுக் குட்டியை மோடி வாஞ்சனையுடன் தடவிக் கொடுப்பதும், மடியில் வைத்து வருடுவதும், முத்தம் கொடுப்பதும் நெட்டிசன்கள் மத்தியில் பேச்சுப் பொருளாகியுள்ளது.
கன்றுக் குட்டியும் மோடியுடன் மிக பாசமாக இருப்பதும் அவரின் கன்னத்தில் முத்தமிடுவதும் பார்ப்போரை நெகிழச் செய்கிறது.