நியூ யோர்க், செப்டம்பர் -18, Instagram-மில் இளம் பயனர்களை ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாக இதுவரை எடுத்த நடவடிக்கைகளிலேயே மிகவும் தைரியமான மற்றும் வியக்கத்தக்கதான நடவடிக்கையை அந்த சமூக ஊடகம் அறிவித்துள்ளது.
அதாவது புதிதாக ‘teen account’ அம்சத்தை அது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் வழி, லட்சக்கணக்கான பதின்ம வயதினரின் Instagram கணக்குகள் தானாகவே private ஆக்கப்படும்.
அதே சமயம், அவ்வயதினர் எந்த மாதிரியான உள்ளடக்கங்களைப் பார்க்கலாம் என்பதையும் அது கட்டுப்படுத்தும்.
Instagram, 18 வயதுக்குட்பட்ட அனைத்து பயனர்களுக்கும் இப்புதிய teen account அம்சத்தை இயல்பாகவே பயன்படுத்தும்.
புதுப்பித்த பிறகு 16 & 17 வயதுடைய பயனர்கள் தங்கள் விருப்பமான அமைப்புகளுக்கான பயன்பாட்டை manual-லாக மாற்ற முடியும்.
ஆனால் 13-15 வயதுக்குட்பட்ட பயனர்கள் அத்தகையை மாற்றங்களுக்கு பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.