போர்ட் கிள்ளான், செப்டம்பர் 18 – ‘Be a donor be a hero’ எனும் கருப்பொருளுடன் போர்ட் கிள்ளானில் இரத்ததான முகாம் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இரத்த கையிருப்பு அளவு குறைவாக இருக்கும் நிலையை முன்னிறுத்தி, இந்த உன்னத முகாம் எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி, போர்ட் கிள்ளான், ஜாலான் கஸ்தாம் (Jalan Kastam), திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெறுகிறது.
காலை 9.30 மணி தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமை குறித்த விவரங்களை அறிந்து கொள்ள திரையில் காணும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் பெருமளவில் இரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று அன்புடன் ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர். உதிரம் கொடுத்து உயிர் காப்போம் வாரீர்!