கோலாலம்பூர், செப்டம்பர் 19 – நாளை, செப்டம்பர் 20ஆம் திகதி, ‘லப்பர் பந்து’ எனும் படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் கதாநாயகன் ஹரீஷ் கல்யாண் மலேசியாவிற்கு வருகை புரிந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து தன்னை மெருகேற்றிக் கொண்டு, தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவரான ஹரீஷ் கல்யாண் நடித்துள்ள, லப்பர் பந்து திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட கதையாகும்.
கிராமப்புறத்தில் நடக்கும் கிரிக்கெட் கதைக்களத்துடன் காதல், குடும்ப சூழலுடன் இந்த படம் வெளியாக இருப்பதாக ஹரீஷ் கல்யாண் இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
Pc
கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யம் மற்றும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள் இரண்டும் கலந்து சிறப்பான ஒரு திரைக்கதையாக லப்பர் பந்து அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எதிரெதிர் அணியில் விளையாடும் தினேஷ், ஹரிஷ் கல்யாண் இடையே ஏற்படும் மோதலே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.
தினேஷின் மனைவியாக ஸ்வஸ்கா (Swasika) மற்றும் ஹரிஷ் கல்யாண் காதலியாகவும் தினேஷின் மகளாகவும் சஞ்சனா (Sanjana) ஆகியோர் நடிந்துள்ளனர்.
மலேசியாவில் Era studio மற்றும் V studio productions-யின் கீழ் இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியீடு காணவுள்ளது.