வாஷிங்டன், செப்டம்பர்-24 – விண்வெளியின் கருந்துளையில் (black hole) ஓயாமல் ஒலிக்கும் பயங்கர ஓசையை, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 25 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பெர்சியஸ் விண்மீன் மண்டலத்தில் (perseus galaxy cluster) அந்த கருந்துளை உள்ளது.
2003-ஆம் ஆண்டு முதன் முறையாக கண்டறியப்பட்ட அந்த மர்ம ஒலியை, மனித காதுகளுக்குக் கேட்கும் வகையில் sonification முறையில் மாற்றி நாசா வெளியிட்டுள்ளது.
நாசா வெளியிட்டுள்ள வீடியோவில், கருந்துளையில் இருந்து வெளிப்படும் சத்தத்தை கேட்க முடிகிறது.
விண்வெளியில் இருந்து இதற்கு முன் பதிவுச் செய்யப்பட்ட பல அலைகளைப் போலவே, இந்த அலையும் ‘பயமுறுத்தும்’ வகையில் உள்ளது.
பொதுவாக கருந்துளை எப்படி இருக்கும் என்ற புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்துள்ள நாசா, முதன் முறையாக வெளியிட்டுள்ள இந்த சத்தம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.