வாஷிங்டன், செப்டம்பர்-25, அமெரிக்காவில் இரு விமானங்கள் நடுவானில் மோதிக் கொள்வது தவிர்க்கப்பட்டுள்ளது.
New Jersey, Newark விமான நிலையத்திலிருந்து San Francisco புறப்பட்ட United Airlines நிறுவனத்தின் UA 2428 விமானம், Oakland வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரத்திடமிருந்து மோதல் தவிர்ப்பு எச்சரிக்கையைப் பெற்றது.
இதையடுத்து, அந்த போயிங் 757-200 விமானம், மற்றொரு விமானம் குறைந்த உயரத்தில் பறப்பதற்கு வழி விட்டு, maneuver முறையில் தனது இறங்குதலை மெதுவாக்கியது.
Maneuver என்பது விமானங்கள் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது, மோதலைத் தவிர்க்க மேற்கொள்ளப்படும் கடைசி பாதுகாப்பு முயற்சியாகும்.
அச்சம்பவம் San Francisco வடக்கே 70 மைல் தொலைவில், 31,000 அடி உயரத்தில் நிகழ்ந்தது.
சம்பவத்தின் போது பாதுகாப்பு இடைவாரை அணியுமாறு பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தோம்; ஆனால் அப்போது இருக்கையில் இல்லாத ஒருவர் உள்ளிட்ட இரு பயணிகளுக்குக் காயமேற்பட்டு விட்டது.
விமானம் பாதுகாப்பாக San Francisco-வில் தரையிறங்கியதும், அவ்விருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக United Airlines கூறியது.
அமெரிக்க மத்திய வான் போக்குவரத்து தரப்பான FAA அச்சம்பவத்தை விசாரித்து வருகிறது.