ஜோகூர், செப்டம்பர் 25 – ஜோகூரிலும் ஈமச்சடங்கு காரியங்களுக்காக இரண்டு இந்து மின்சுடலைகளை நிர்மாணிப்பதற்கு, 5 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
இந்த கோரிகையை நிறைவேற்றிய நாட்டின் பிரதமர், நாட்டின் துணை பிரதமர் ஷாஹிட் ஹமிடி, ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி (Datuk Onn Hafiz Ghazi), ம.இ.காவின் தேசிய தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், ஜோகூர் மாநில சுற்றுலா, சுற்றுச்சூழல், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரக் குழு ஆட்சிக்குழு உறுப்பினர் ரவின் குமார்.
Video
இதுமட்டுமல்லாமல், ஜோகூரில் குறைந்த மாணவர் எண்ணிக்கையைப் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ள இரு தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளிகளை, நகர்ப்புறத்திற்கு இடமாற்றம் செய்ய Impian emas மற்றும் taman university ஆகிய 2 நிலங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2024ஆம் ஆண்டு வரை மொத்தம் 16,925, 680 ரிங்கிட் நிதியை, கோவில்கள், பள்ளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஜோகூர் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
அவ்வகையில், ஜோகூர் மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்தின் தேவைகளுக்கு உதவுவதில் ஜோகூர் மாநில அரசு மிகவும் உறுதியுடன் உள்ளது என்பதை இது நிரூபிக்கிறது என்றார் ரவீன் குமார்.