Latestமலேசியா

குளோபல் இக்வான் நிறுவனம் இதுவரை வரி கட்டியதே இல்லை; விசாரணையில் அம்பலம் என IGP தகவல்

கோலாலம்பூர், செப்டம்பர்-26 – குளோபல் இக்வான் நிறுவனம் மீதான விசாரணையில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் அம்பலாகி வருகின்றன.

ஏற்கனவே சிறார் இல்ல துன்புறுத்தல், முறை தவறிய சமய போதனை உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள அந்நிறுவனம், வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் (LHDN) ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட விசாரணையில், அந்நிறுவனம் இதுவரை வரி கட்டியதே இல்லையென தெரிய வந்திருப்பதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Tan Sri Razarudin Husain) தெரிவித்தார்.

1967 வருமான வரி சட்டத்தின் கீழ் போலீஸ் விசாரணை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.

இவ்வேளையில் குளோபல் இக்வான் விசாரணைக்கான தடுப்புக் காவல் முடிந்தவர்களில் 34 பேர், SOSMA எனப்படும் 2012 பாதுகாப்புக் குற்றங்களுக்கான சிறப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைதுச் செய்யப்படுகின்றனர்.

மேலும் 127 பேர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக IGP கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!