Latestமலேசியா

கெடாவில் காணாமல் போன முன்னாள் அரசு அதிகாரி கொலை; சடலம் ஆற்றில் வீசப்பட்டதை போலீஸ் உறுதிப்படுத்தியது

ஜித்ரா, அக்டோபர்-1, செப்டம்பர் 4 முதல் காணாமல் போன பாலிங் Felcra அலுவலக முன்னாள் நிதி அதிகாரி சபாரி பஹாரோம் (Sabari Baharom) கொல்லப்பட்டிருப்பதை, கெடா போலீஸ் உறுதிச் செய்துள்ளது.

உள்ளூர் ஆடவர்களான இரு சந்தேக நபர்களைக் கைதுச் செய்து விசாரித்ததில் உண்மை வெளியானது.

இரு கைகளையும் கயிற்றால் கட்டி, வாயில் பிளாஸ்டர் ஒட்டி 62 வயது சபாரியை குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள பாடாங் தெராப் ஆற்றில் வீசியதை, இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

முறையே 26 மற்றும் 38 வயதுடைய சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை கைதானதாக, கெடா போலீஸ் தலைவர் டத்தோ ஃபீசோல் சாலே (Datuk Fisol Salleh) தெரிவித்தார்.

எனினும் சபாரியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தொடர்ந்து தேடி வருகிறோம் என்றார் அவர்.

சபாரி மர்மமான முறையில் காணாமல் போன அன்று, அவரின் Proton Waja கார் Sik, Hutan Gubir பள்ளத்தில் குப்பைகளைக் கொட்டுமிடத்தில் எரியூட்டப்பட்டுக் கிடந்தது.

அதோடு, அவரின் Tabung Haji சேமிப்புக் கணக்கிலிருந்தும் குறிப்பிட்ட தொகை, மற்றவர்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டிருந்தது.

எனவே அடையாளம் தெரியாத நபர்களால் சபாரி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குடும்பத்தார் போலீசில் புகார் செய்திருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!