பாகன் டத்தோ, அக்டோபர் 1 – செம்பனை தோட்டத் தொழிலாளி ஒருவரின் வழக்கைத் தீர்ப்பதற்கு, 2,000 ரிங்கிட் பணம் கேட்டு வாங்கிய போலீஸ்காரர் ஒருவர், அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயது மதிக்கத்தக்க செம்பனை தோட்டத் தொழிலாளி, முன்னதாக சிறுநீர் பரிசோதனை வழக்கு ஒன்றில் பிடிபட்டுள்ளார்.
அதனைத் தீர்க்க முன்வந்த, பாகன் டத்தோ மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்த போலீஸ்காரர், 2,000 ரிங்கிட் பணத்தை லஞ்சமாகக் கேட்டு பறித்திருக்கிறார்.
போலிஸ்காரரின் தவறான நடத்தை குறித்து, அந்த தொழிலாளி காவல் நிலையத்தில் புகார் அளிந்த நிலையில், அதிரடியாக ஊத்தான் மெலிந்தாங்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.