கோலாலம்பூர், அக்டோபர் 8 – கால்வாய் நீரைப் பயன்படுத்தி ரொட்டிச் சானாய் வியாபாரி ஒருவர், சமையலுக்குப் பயன்படுத்தும் இரும்புச்சட்டியை கழுவிய, காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
அருவருக்கத்தக்க இந்த செயலை பெண் ஒருவர் பார்த்து, சமூக வலைத்தளங்களில் 16 வினாடி காணொளியாகப் பதிவு செய்து பதிவேற்றியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, சமூக வலைத்தளவாசிகள் அந்த ரொட்டி சானாய் வியாபாரியை வறுத்து எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
கால்வாய் நீரில் சட்டியைக் கழுவும் செயலைக், கடிந்து வலைத்தளவாசிகள் கருத்துகளைப் பதிவிட்டு வரும் நிலையில், அந்த ரொட்டிச் சானாய் வியாபாரி வர்த்தகம் செய்யும் பகுதியின் விபரம், வெளியிடப்படவில்லை.