
கோலாலம்பூர், அக்டோபர் 10 – குளோபல் இக்வான் தலைமை இயக்குநர் உட்பட 15 பேர் சொஸ்மா சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டனர் என்பதை புக்கிட் அமான் குற்ற புலனாய்வுத் துறை உறுதிப்படுத்தியது.
கைது செய்யப்பட்டவர்களுக்கான தடுப்பு காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அவர்கள் மீண்டும் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் 28 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதனிடையே, குளோபல் இக்வான் சர்ச்சை தொடர்பில் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைதானவர்களின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.