Latestமலேசியா

தீபாவளியை முன்னிட்டு தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நி சிங் வணக்கம் மலேசியா அலுவலகத்துக்கு நல்லெண்ண வருகை

கோலாலம்பூர், அக்டோபர்-19 – தீபாவளியை முன்னிட்டு தமிழ் ஊடகங்களின் அலுவலகங்களுக்கு நல்லெண்ண வருகை மேற்கொண்ட தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ ச்சிங் (Teo Nie Ching), வணக்கம் மலேசியா அலுலகத்திற்கும் வருகைப் புரிந்தார்.

வெள்ளிக்கிழமை காலை வணக்கம் மலேசியா தலைமைப் பணியிடத்துக்கு வந்த துணையமைச்சரை, அதன் நிர்வாக இயக்குநர் எம்.தியாகராஜன், செய்திப் பிரிவுத் தலைவர் வி.வேதகுமாரி, விளம்பரப் பிரிவு தலைவர் பி.ஜெகநாதன், தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் பி.ரமேஷ் ஆகியோர் எதிர்கொண்டு வரவேற்றனர்.

அதன் போது உயர் நிர்வாகத்தினருக்கும் பணியாளர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட துணையமைச்சர், வணக்கம் மலேசியாவின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

விடைபெறும் முன்பாக அமைச்சின் தீபாவளி அன்பளிப்புகளையும் அவர் வழங்கிச் சென்றார்.

அலுவலகத்திற்கு வருகை புரிந்த துணையமைச்சர் மற்றும் அவர்தம் குழுவினருக்கு நன்றி தெரிவித்த தியாகராஜன், வணக்கம் மலேசியா சார்பில் நினைவுப் பரிசுகளையும் எடுத்து வழங்கினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!