
ஈப்போ, அக்டோபர்-21, ஈப்போ, புக்கிட் கிளேடாங் மலையில் ஏறிய போது 71 வயது முதியவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி மரணமடைந்தார்.
கடல் மட்டத்திற்கு மேல் 800 மீட்டர் உயரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
மலையேறும் போது மிகவும் களைத்துப் போய், மூச்சுத் திணறிய அவ்வாடவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து சம்பவ இடம் விரைந்த பாசீர் பூத்தே தீயணைப்பு – மீட்புப் படையினர் அவருக்கு முதலுதவி வழங்கினர்.
சற்று நேரத்தில் வந்து சேர்ந்த மருத்துவக் குழு அம்முதியவர் இறந்து விட்டதை உறுதிச் செய்தது.
மீட்புக் குழுவினர் மலையிலிருந்து அவரின் உடலை தூக்கி வந்து மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைத்தனர்.