
ஈப்போ, அக்டோபர்-21 – ஈப்போ சுற்று வட்டாரத்தில் இன்று காலை 11 மணிக்கு பெரிய சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டதால், மாநகர மக்கள் பீதியடைந்தனர்.
திடீரென கட்டடம் குலுங்கி, கண்ணாடிகள் உடைந்து விழுவது போல் இருந்ததால் ஏராளமானோர் வெளியில் ஓடி வந்தனர்.
வெடிகுண்டு சத்தம் போல் கேட்பதற்கு அது பயங்கரமாக இருந்ததாக பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர்.
ராஜா பெர்மாய்சூரி மருத்துவமனை, ச்செமோர், பேராக் விளையாட்டரங்கம், மேரு, மஞ்சோய், மெனோரா சுரங்கப் பாதை அருகேயுள்ள PLUS நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் அவ்வெடிப்பும் அதிர்வும் உணரப்பட்டதாக வலைத்தளவாசிகள் கூறினர்.
எனினும், கனிம வள மற்றும் புவி அறிவியல் துறையிடமிருந்தோ தீயணைப்பு-மீட்புத் துறையிடமிருந்தோ இதுவரை அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.