கோலாலம்பூர், நவ 7 – STR எனப்படும் Sumbangan Tunai Rahmah (STR) 2024 ரொக்க நிதிக்கான கடைசித் தொகையை அந்தந்த பிரிவுக்கு ஏற்ப தகுதி பெற்ற 8.7 மில்லியன் மக்கள் இன்று முதல் கட்டம் கட்டமாக பெறுவார்கள்.
இவ்வாண்டு டிசம்பர் 9ஆம் தேதி முதல் சாரா எனப்படும் Sumbangan Asas Rahmah (SARA ) நிதியில் ஒரு முறை வழங்கப்படும் கூடுதல் தொகையை ஏழ்மை நிலையில் இல்லாத 8 மில்லியன் பேர் STR தொகையை பெறுவார்கள்.
வறிய ஏழ்மை நிலையிலுள்ள எஞ்சிய 700,000 பேர் இவ்வாண்டு முழுவதிலும் SARA Bantuan உதவியை தொடர்ந்து பெறுவார்கள். இந்த கூடுதல் தொகையின் வழி இவ்வாண்டுக்கான STR தொகையின் கடைசி தொகையாக 1,000 ரிங்கிட்வரையை தகுதி பெற்ற குடும்பத்தினர் பெறுவார்கள் என நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே மோசடியை தடுப்பதற்காக தனிப்பட்ட தகவல்களை வழங்கும்படி கோரும் எந்தவொரு குறுஞ்செய்தி மற்றும்
WhatsApp மூலம் கேட்டுக்கொள்ளப்படாது என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.