Latestமலேசியா

நவம்பர் 16-ல் ஜோகூர் மக்கள் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி ; பொது மக்கள் அழைக்கப்படுகிறார்கள்

ஜோகூர் பாரு, நவ 14 – ஜோகூர் ம.இ.கா ஏற்பாட்டில் (Bangsa ஜோகூர்) மக்களின் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி இம்மாதம் 16 ஆம்தேதி சனிக்கிழமை மாலை மணி 6.30 அளவில் ஜொகூர் பாரு, ஜாலான் தித்திவங்சா 4, Taman Tempoi Indahவில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் , ஜோகூர் மந்திரிபெசார் டத்தோ ஒன் ஹபிஸ் காஷி ஆகியோர் இந்த நிகழ்சிக்கு சிறப்பு வருகை புரிவார்கள் என் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் , ஜோகூர் மாநில ம.இ.கா தலைவருமான ரவின் குமார் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

ஜோகூர் பொது இயக்கங்களின் ஒத்துழைப்போடு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியர்களின் பாரம்பரிய பண்பாட்டு படைப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பிக்கும்படி
ரவின் குமார் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டார்.

இந்து சங்கம், ஜோகூர் தெலுங்கு சங்கம், ஜோகூர் மலையாளி சங்கம், ஜோகூர் பஞ்சாபி சங்கம் , ஜோகூர் இந்திய வாணிக தொழிலியல்ல சங்கம் மற்றும் அருள்மிகு ராஜ மாரியம்மன் தேவஸ்தானம், Tampoi ஸ்ரீ முனிஸ்வரர் ஆலயம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜோகூர் ம.இ.காவின் தலைவருமான டத்தோ ரவின் கிருஷ்ணசாமி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!