சுபாங் ஜெயா, நவம்பர்-17 – அக்டோபர் 12-ஆம் தேதி சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் ஓர் ஆடவரிடமிருந்து 30,000 ரிங்கிட் மதிப்பிலான தங்கச் சங்கிலி வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 3 உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.
30 வயது மதிக்கத்தக்க அம்மூவரும் நேற்று முன்தினம் பெட்டாலிங் ஜெயா, சுபாங் சுற்று வட்டாரங்களில் வெவ்வேறு இடங்களில் கைதாகினர்.
அம்மூவரும் முறையே ஆவணங்களை அனுப்புபவர், தங்க நகை வாங்குபவர், நகைக் கடைப் பணியாளர் ஆவர்.
வழிப்பறி செய்யப்பட்டதாக நம்பப்படும் மேலும் சில நகைகள், கட்டண இரசீதுகள், மற்றும் ஒரு Yamaha 135LC மோட்டார் சைக்கிளும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
மூவரில் இருவர் 3 நாட்களுக்கும் இன்னொருவர் ஒரு நாளும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அக்கும்பல் கைதாகியிருப்பதை அடுத்து, சுபாங் ஜெயாவில் குறைந்தது 8 வழிப்பறிச் சம்பவங்கள் தீர்க்கப்பட்டிருப்பதாக போலீஸ் நம்புகிறது.