கோத்தா கினாபாலு, நவம்பர்-24, சபா சட்டமன்றத்தில் Kunak சட்டமன்ற உறுப்பினர் Norazlinah Arif-ஃபின் தோளில் குத்தியதற்காக, Warisan கட்சியைச் சேர்ந்த Merotai சட்டமன்ற உறுப்பினர் Sarifuddin Hata மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
GRS எனப்படும் சபா மக்கள் கூட்டணியை ஆதரிப்பதற்காகக் கடந்தாண்டு பிப்ரவரியில் Warisan கட்சியை விட்டு வெளியேறியவரான Norazlinah, புதன்கிழமை நடந்த அச்சம்பவம் குறித்து முன்னதாக போலீசில் புகார் செய்திருந்தார்.
தோளில் குத்தப்பட்டதால், உடல் ஆட்டங்கண்டு, கை வலிக்கும் தாம் ஆளானதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் Norazlinah-விடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்ட Sarifuddin, தோளில் குத்தியது சற்று எல்லை மீறிய நகைச்சுவை என்பதை ஒப்புக் கொண்டார்.
மற்றபடி, அவருக்கு வலியை ஏற்படுத்தும் எண்ணமெலாம் தமக்கு இல்லை என்றார் அவர்.
அதற்கு முகநூலில் பதிலளித்த Norazlinah, Sarifuddin-னை தாமும் தனது கணவரும் மன்னிப்பதாகக் கூறினார்.
நகைச்சுவை என்ற பெயரில் எல்லை மீறுவது ஒரு கலாச்சாரமாகி விடக் கூடாது என்றும் அவர் நினைவுறுத்தினார்.