கோலாலம்பூர், நவ 25 – மலேசிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சுவாட்ச் பிரைட் (Swatch Pride ) கைக்கடிகாரங்களை திரும்ப பெறுவதில் அந்த கைக் கடிகாரங்களின் தயாரிப்பாளரான சுவிஸ்லாந்து நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. LGBT சமூகத்தின் அடையாளமாக திகழும் வானவில் நிழல்களை கொண்ட Swatch Group ( Malaysia) Sdn Bhd ட்டின் கைக்கடிகாரங்களை திரும்ப பெறுவதற்கான நீதித்துறையின் சீராய்வு மனுவுக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமத்தித்தது. கடந்த ஆண்டு மே மாதம் 13 மற்றும் 15 ஆம் தேதிக்கிடையே நாடு தழுவிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது உள்துறை அமைச்சு அந்த பிரபலமான கைக் கடிகாரங்களை பறிமுதல் செய்துள்ளது.
1984 ஆம் ஆண்டின் அச்சக பிரசுரம் மற்றும் வெளியீட்டுச் சட்டத்தின் 7ஆவது விதியின் கீழ் LGBT தாக்கங்களைக் கொண்ட Swatch கைக்கடிகாரங்கள் அல்லது பெட்டிகள் உட்பட தொடர்புடைய பொருட்கள் மீதான தடையை கடந்த ஆண்டு ஆகஸ்டு 10ஆம் தேதி அரசாங்க பதிவேட்டில் வெளியிடப்பட்டது. சோதனைக்கு முன்னர், அந்த கடிகாரங்கள் எந்தவொரு பிரச்சனையும் இன்றி வெளிப்படையாக மலேசியாவில் விற்கப்பட்டன என்று தனது எழுத்துப் பூர்வமான சத்திய பிரமானத்தில் Swatch நிறுவனத்தின் சுவிஸ்லாந்து நிர்வாகி மார்ட்டின் இஸிங் ( Martin Issing) நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.