கோலாலம்பூர், நவம்பர்-28, 2025/2026 கல்வியாண்டின் மெட்ரிகுலேஷன் படிப்புக்கான முதல் கட்ட விண்ணப்பம், வரும் ஞாயிறன்று திறக்கப்படுகிறது.
2024 SPM தேர்வெழுதும் மாணவர்கள் டிசம்பர் 1 முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 28 வரை அதற்கு விண்ணப்பிக்கலாம்.
SPM தேர்வு முடிவுகள் வெளியானதும், இரண்டாம் கட்டமாக விண்ணப்பிக்கவும், சுயவிவரங்களைப் புதுப்பிக்கவும் மாணவர்களுக்கு 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுமென, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் மெட்ரிகுலேஷன் படிப்புக்கான விண்ணப்பம் இலவசமாகும்; மாணவர்கள் https://matrikulasi.moe.gov.my என்ற இணைய அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
2024 SPM தேர்வு முடிவுகள் வெளியானதும் அடுத்த 21 நாட்களில் மெட்ரிகுலேஷன் விண்ணப்ப முடிவுகள் வெளியிடப்படும்.
விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு இடம் கிடைத்தவர்கள், மேற்கண்ட அகப்பக்கத்தில் அதற்கான கடிதத்தையும் பதிவு ஆவணங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டுமென, கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.