பினாங்கு, நவம்பர் 28 – பினாங்கு மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் நலன்களைக் காக்கும் விதமாக இந்தியச் சமூக நலத்துறை பிரிவு அமைக்கப்படும் என்று பினாங்கு மாநில டி.ஏ.பியின் தலைவர் ஸ்டீவன் சிம் கூறினார்.
நேற்று நடைபெற்ற டி.ஏ.பி செயற்குழுவின் முதல் சந்திப்பு கூட்டத்தில், பினாங்கு மாநிலத்தில் வாழும் இந்தியச் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக இந்தியச் சமூக நலத்துறைக்கு ஒரு சிறப்பு பிரிவு உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அப்பிரிவு, டி.ஏ.பியின் துணைத் தலைவர் ராம் கர்பால் சிங் தலைமையில் உருவாக்கம் காணவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களின் சமூக நலனுக்கான ஒரு தளமாக இப்பிரிவு அமையுமென்று, மனிதவள அமைச்சருமான ஸ்டீவன் சிம் கூறியுள்ளார்.