Latestமலேசியா

மோசமடையும் வெள்ளம்; அமைச்சர்-துணையமைச்சர்களின் விடுமுறைகளை முடக்க பிரதமர் உத்தரவு

கோலாலம்பூர், நவம்பர்-29, நாட்டில் பல மாநிலங்கள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், அனைத்து அமைச்சர் மற்றும் துணையமைச்சர்களின் விடுமுறைகளை முடக்கி வைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, அமைச்சர் பெருமக்கள் களத்திலிறங்கி பணியாற்ற வேண்டுமென்றும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பணித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுடன் மத்திய அரசும் இணைந்து மக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிச் செய்யுமென பிரதமர் ஏற்கனவே கூறியிருந்தார்.

MET Malaysia எனப்படும் மலேசிய வானிலை ஆராய்ச்சி மையத்தின் கணிப்பின் படி, 6 மாநிலங்களில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை வெள்ளமேற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கிழக்குக் கரை மாநிலங்களை 2014-ல் புரட்டிப் போட்ட பெருவெள்ளத்தை விட, இவ்வாண்டு வெள்ளப் பாதிப்பு மோசமாக இருக்குமென ஐயுறப்படுகிறது.

இதையடுத்து, தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனமான NADMA பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களைச் சேர்ந்த 82,000 உறுப்பினர்களை களத்தில் இறக்கியுள்ளது.

மீட்புப் பணிகளுக்காக 30,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஜேக்கட்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆகக் கடைசி தகவலின் படி, 9 மாநிலங்களில் 87,000-க்கும் மேற்பட்டோர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!