
கோலாலம்பூர், டிச 2 – ஏ.டி.எம். இயந்திரங்களில் பணப் பட்டுவாடா சேவைக்கு 1 ரிங்கிட் கட்டணம் விதிப்பதை ரத்து செய்யும்படி Payments Network Malaysia Sdn Bhd (PayNet) மற்றும் பேங்க் நெகாரா மலேசியா (BNM) உள்ளிட்ட அதன் பங்குதாரர்களை Nube எனப்படும் வங்கி ஊழியர்களின் தேசிய தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கட்டணத்தால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலான தொழிற்சங்க ஊழியர்களின் உறுப்பினர்களும் தங்கள் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்படுகின்றனர் என Nube தெரிவித்துள்ளது.
ஏ.டி.எ.ம் பண மீட்பு சேவைக்காக கட்டணம் விதிக்கப்படுவதால் கோவிட் பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து இன்னும் மறுவாழ்வு நடவடிக்கையை எதிர்நோக்கியிருக்கும் குறைந்த வருமானம் பெறுவோரின் குடும்பத்தினர் சுமையை எதிர்நோக்கி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கான மற்ற வங்கிகளில் அடிக்கடி பண மீட்பு மற்றும் இதர நடவடிக்கைகளுக்கு ஒரு ரிங்கிட் கட்டணம் விதிப்பது நியாயமற்றது என்பதோடு நிதி நெருக்கடி சவாலையும் எதிர்நோக்கியுள்ளனர். இதர பரபரப்பான பணிகளுக்கு இடையில் வங்கியில் ஒவ்வொரு முறையும் ஒரு ரிங்கிட் கட்டணம் விதிப்பது ஏற்கனவே வரையறுக்கப்பட்ட நிதியை கொண்டிருப்பவர்களுக்கு பெரும் சுமையாக இருப்பதாகவும் NUBE வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.