
கோ சாமுய், டிசம்பர்-4 – தாய்லாந்தின் கோ சாமுய் (Koh Samui) தீவில் கடற்கரையில் பாறைகளின் மீது அமர்ந்து யோகா செய்த ரஷ்ய நடிகை, அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
24 வயது கமிலா பெலியாட்ஸ்கியா (Kamilla Belyatskaya) தனது காதலனுடன் விடுமுறைக்காக தாய்லாந்து சென்றிருந்தார்.
இந்நிலையில் அங்குள்ள கடற்கரையில் பாறைகளின் மேல் அமர்ந்து யோகா செய்துகொண்டிருந்த கமிலா, திடீரென எழும்பிய பேரலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார்.
அப்போது அங்கிருந்த ஒருவர் கமிலாவைக் காப்பாற்ற முயன்று தோல்வி கண்டார்.
அலையில் இழுத்துச் செல்லப்பட்ட கமிலா, பல கிலோ மீட்டர் தூரத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
தான் கடைசியாக அமர்ந்த அந்த பாறைகளைக் குறிப்பிட்டு ‘உலகின் மிகச் சிறந்த இடம்’ என கமிலா பல முறை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.