கோலாலம்பூர், டிச 5 – முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஏமாற்றியது
தொடர்பாக அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணையை ( RCI ) எனப்படும் பத்து பூத்தே அரச விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
X சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட வகைப்படுத்தப்பட்ட அறிக்கையின் நகல் இன்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டது என்று பொதுப் பணித்துறை துணையமைச்சர் அகமட் மஸ்லான் தெரிவித்தார்.
குற்றவியல் விசாரணைக்கு வழி வகுக்கும் வகையில் மகாதீருக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்ய ஆணைக்குழுவின் செயலாளருக்கு பரிந்துரை செய்ததாக அரச விசாரணை ஆணையம் சுட்டிக்காட்டியது.
குற்றவியல் சட்டத்தின் 415 (b) விதியின் கீழ் ஏமாற்றியது தொடர்பான விசாரணை தொடங்கப்படலாம் என்பதோடு , 417 ஆவது விதி மற்றும் 418 ஆவது விதியின் கீழ் தண்டிக்கப்படலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரச விசாரணைக் குழுவின் தலைவர் Raus Sharif விசாரணை குழுவின் இறுதி அறிக்கையை ஆகஸ்டு 12 ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் பேரரசர் சுல்தான் இப்ராஹிமிடம் சமர்ப்பித்தார்.