சிங்கப்பூர், டிசம்பர்-7, சிங்கப்பூர் McDonald’s உணவகங்களில் வரும் ஜனவரி 2-ஆம் தேதி தொடங்கி, நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக சுவையூட்டி பேக்கேட்டுகள் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும்.
BBQ, Curry, Mud Mustard போன்ற சாஸ் சுவையூட்டிகளுக்கு, வாடிக்கையாளர்கள் கேட்கும் ஒவ்வொரு கூடுதல் பேக்கெட்டுக்கும் 1 ரிங்கிட் 65 சென் கட்டணம் வசூலிக்கப்படும்.
அதுவே, Japanese Roasted Sesame போன்ற Salad வகை சாஸ் பேக்கெட்டுக்கு, சிங்கப்பூர் காசுக்கு 0.70 சென் கட்டணம் விதிக்கப்டும்.
எனினும் இரு முதன்மை சுவையூட்டிகளான தக்காளி சாஸ் மற்றும் பூண்டு சாஸ் தொடர்ந்து இலவசமாக வழங்கப்பட்டு வரும்.
அதிகரித்து வரும் உணவுக் கழிவுப் பொருட்கள் மற்றும் செலவினங்களைக் கையாளும் முயற்சியில் இந்த புதியக் கொள்கை அறிமுகமாவதாக, McDonald’s நிறுவனம் விளக்கியது.
உண்மையில் அக்கொள்கை காலங்காலமாக உள்ளதுதான்; ஆனால் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.