ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-10 – பினாங்கு, ஜோர்ஜ்டவுன், மக்காலிஸ்தர் (Macallister) சாலையில் இன்று காலை உச்ச நேரத்தின் போது 14 அடி மலைப்பாம்பு புகுந்ததால் பொது மக்கள் பதறிப்போயினர்.
காலை 8 மணிக்குத் தகவல் கிடைத்து சம்பவ இடம் சென்றடைந்த தீமோர் லாவோட் பொதுத் தற்காப்புப் படை, மலைப்பாம்பு சாலை சமிக்ஞை அருகே இருப்பதைக் கண்டது.
பாம்பு, குழிக்குள் புகுந்த தப்பியோட முயன்றதால் தொடக்கத்தில் அவர்கள் சிரமத்தை எதிர்நோக்கினர்.
இதையடுத்து அருகிலிருந்த குத்தகைத் தொழிலாளர்களும் APM அதிகாரிகளுக்கு உதவினர்.
ஒருவழியாக காலை 8.40 மணிக்கு மலைப்பாம்பு பிடிப்பட்டது.
பரிசோதனையில் அது Albino reticulated python வகை மலைப்பாம்பு என்றும் உறுதிச் செய்யப்பட்டது.