Latestமலேசியா

ஜோகூர், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முத்தமிழ் பண்பாட்டு விழா; ஆரம்பப்பள்ளி நடனப்போட்டி பிரிவில் தமிழ்தனா ஸ்ரீ ருத்ரன் நடனக்குழு வெற்றி

ஜோகூர், டிசம்பர் 16 – ஜோகூரில், மலேசிய தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் பண்பாட்டு விழா 2024 மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் முக்கிய அம்சமாக இயல், இசை, நாடகமென முத்தமிழின் மூன்று கூறுகளைளையும் பிரதிபலிக்கும் வகையில், ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி மாணவர்கள் வரைக்கும் பல்வேறு போட்டிகள் நடந்தேறியது.

இதில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான நடனப்போட்டியில், தமிழ்தனா ஸ்ரீ ருத்ரன் முருகன் நடனக்குழு வெற்றியுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

திருமுருகனைப் போற்றி காவடி ஆட்டத்தில் தொடங்கிய இந்த நடனக்குழுவினர், தமிழரின் 17 பாரம்பரியக் கலைகளை ஒரே நடனத்தில் ஒன்றிணைத்து அனைவரையும் மெய்மறியச் செய்தனர்.

இக்குழுவினர் சற்றே புதுமையான கலைமிகு ஆற்றல், பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகளையும், ஆய்வுக் குழுவிடமிருந்து பலத்த கரகோசத்தையும் பெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!