Latestமலேசியா

சமூக ஊடகங்களை நடத்துவோர் வயது கட்டுப்பாட்டை பின்பற்ற தவறினால் நடவடிக்கை – பாமி பாட்ஸில்

கோலாலம்பூர், டிச 19 – 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வளைத்தள கணக்குகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வயதுக் கட்டுப்பாடுகளை மலேசியாவில் சமூக ஊடகங்களை நடத்துவோர் அமல்படுத்தத் தவறினால் அரசு நடவடிக்கை எடுக்கும் . அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம்தேதி முதல் சமூக வலைத்தளங்களை நடத்துவோர் தங்கள் சேவை உரிமங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்பு அமைச்சர் பாமி பாட்ஸில் (Fahmi Fadzil ) தெரிவித்தார். அதே வேளையில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் மற்றும் இளைஞர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஆஸ்திரேலியாவின் சட்டத்தை பின்பற்றும் எண்ணம் மலேசியாவுக்கு இல்லை என்று அவர் கூறினார். அதற்கு பதிலாக, சமூக வலைத்தளங்களை நடத்திவருபவர்கள் வயது வரம்புகளை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதை அரசாங்கம் மதிப்பீடு செய்யும்.

இது தற்போது 13 வயதிற்குட்பட்ட பயனர்களை கணக்குகளை உருவாக்குவதை கட்டுப்படுத்துகிறது என அவர் சுட்டிக்காட்டினார். தளங்கள் தங்கள் வயது வரம்புகளை நிர்ணயித்து, அவற்றை எவ்வளவு சிறப்பாகச் செயல்படுத்துகின்றன என்பதைக் கவனிப்பதற்கு நாங்கள் அனுமதிப்போம். அவ்வாறு செய்யத் தவறினால், கூடுதல் நடவடிக்கைகளை நாங்கள் பரிசீலிப்போம் என்று ஈப்போ , மேருவில் இன்று நடைபெற்ற பேரா பொருளாதார கண்ணோட்டம் 2025 நிகழ்வில் கலந்துகொண்ட பின் பாமி இத்தகவலை வெளியிட்டார். சீரான நிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தாமல்,
பாதுகாப்பை சமூக வலைத்தளங்கள் உறுதிசெய்யும் நோக்கத்தையும் அரசாங்கம் கொண்டுள்ளதாக பாமி கூறினார். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான சட்டங்களுக்கு கோரிக்கை விடுத்த போதிலும் ஆஸ்திரேலியாவைப் போல வயதுக் கட்டுப்பாடு சட்டத்தை ஏற்க கூட்டரசு அரசாங்கம் தற்போது திட்டமிடவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!