Latestமலேசியா

இன்னும் வசதிப்படவில்லை என்றால், ஸ்டிக்கர் வடிவிலான வாகனமோட்டும் உரிமங்களைத் தொடந்துப் பயன்படுத்தலாம்

கோலாலம்பூர், டிசம்பர்-20, டிஜிட்டல் வடிவிலான வாகனமோட்டும் உரிமப் பயன்பாட்டில் பிரச்னையை எதிர்நோக்கும் பொது மக்கள், தாராளமாக ஸ்டிக்கர் வடிவிலான உரிமத்தைப் பயன்படுத்தலாம்.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் மீண்டும் அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

அருகிலுள்ள சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ அலுவலகங்களில் அந்த ஸ்டிக்கர் உரிமங்களை பெற்றுக் கொள்ளலாம்.

வெளிநாடு செல்ல விரும்புவோர், அதே JPJ கிளைகளில் வாகனமோட்டும் உரிம அட்டைகளைப் பெற முடியுமென்றார் அவர்.

இந்த டிஜிட்டல்மயமாக்கல் இன்னமும் தொடக்கக் கட்டத்திலேயே, குறிப்பாக உள்நாட்டு பயனீட்டுக்கான இலக்கு வைக்கப்பட்ட தரப்பையே உட்படுத்தியுள்ளதாக அவர் விளக்கினார்.

அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் MyJPJ செயலியின் பதிவிறக்கத்தின் அடிப்படையில் பார்த்தால், டிஜிட்டல் உரிமங்களுக்கு பொதுவில் நல்ல வரவேற்பு இருப்பது தெரிவதாக அந்தோனி லோக் சொன்னார்.

இவ்வாண்டு அக்டோபர் வரை 13.7 மில்லியன் பயனர்கள் MyJPJ செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனதை அவர் சுட்டிக் காட்டினார்.

வாகனமோட்டும் உரிமங்கள் மற்றும் சாலை வரிகளை டிஜிட்டல்மயமாக்கும் முன்னெடுப்பு கடந்தாண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!